குடிக்கு அடிமையான இளம்பெண்! குழந்தைகளை பிச்சையெடுக்க வைத்த அவலம்!

  அனிதா   | Last Modified : 10 Dec, 2019 01:50 pm
begging-children

பெற்ற குழந்தைகளை படிக்க வைப்பதற்காக கூலி வேலை செய்தும், தன்னை வறுத்திக்கொண்டும் வாழும் தாய்மார்கள் மத்தியில் குழந்தைகளை பிச்சையெடுக்க விட்ட அவலம் அரங்கேறியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் அருகே 2 குழந்தைகள் பிச்சை எடுத்து வந்துள்ளனர். குழந்தைகள் பிச்சையெடுப்பதை கண்டு அங்குள்ள பொதுமக்கள் அவர்களிடம் விசாரித்த போது, அந்த குழந்தைகள் தங்களுக்கும் எல்லா குழந்தைகளையும் போல பள்ளி சீருடை அணிந்து, புத்தக பையை சுமந்து கொண்டு சென்று படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால், தாயாருக்கு விருப்பமில்லை என தெரிவித்துள்ளனர். 

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மக்கள் அங்கு விசாரித்தபோது, அந்த குழந்தைகளின் தாய் மது பழக்கத்திற்கு அடிமையானவர், அவருக்கு மது வாங்குவதற்காக குழந்தைளின் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கோயில் வாசலில் பிச்சையெடுக்க வைத்தது தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அந்த குழந்தைகளுக்கு அரசாங்கம் உதவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இந்த குழந்தைகளின் செய்தி  சார் ஆட்சியர் சரவணன் காதுக்கு எட்டியுள்ளது.

இதை தொடர்ந்து அந்த இரு சிறுவர்களையும் மீட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய சார் ஆட்சியர் சரவணன் முன்வந்துள்ளார். எதிர்காலத்தில் அவர்கள் விரும்பும் படிப்பை தந்து அவர்களை நல்ல குடிமகன்களாக கொண்டுவர அரசு உதவவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close