தண்ணீர் கேட்டு, 13 வயசு சிறுமியை நாசம் செய்த காம கொடூரன்!

  அனிதா   | Last Modified : 10 Dec, 2019 03:17 pm
the-12-years-old-girl-was-raped

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், கஞ்ஜிரப்பள்ளியை சேர்ந்த 13 வயது சிறுமி வழக்கம் போல் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அவரது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் வேலை நிமித்தமாக வெளியே சென்றதால் சிறுமி மட்டுமே வீட்டில் இருந்துள்ளார். 

இந்நிலையில், அவரது வீட்டிற்கு அருண் சுரேஷ் என்ற 25 வயது இளைஞர் வந்துள்ளான். அப்போது அந்த சிறுமி வந்து கதவை திறந்துள்ளார். சிறுமியிடம் நான் உனது அண்ணனின் நண்பன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, வீட்டில் அண்ணன் இல்லையா? என கேட்டுள்ளார். சிறுமியும் அண்ணன் வெளியே சென்றுள்ளார் என பதிலளித்துள்ளார். இதையடுத்து உனது பெற்றோரை கூப்பிடு என கூறிய போது அவர்களும் இல்லை என தெரிவித்துள்ளார். வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்துக் கொண்ட சுரேஷ், தனக்கு தாகமாக இருப்பதாகவும், குடிக்க கொஞ்சம் தண்ணீர் தருமாறும் கேட்டுள்ளான். 

அண்ணனின் நண்பன் என கூறியதால் சிறுமியும் கதவை பூட்டாமல், தண்ணீர் எடுப்பதற்காக சமையல் அறைக்கு சென்றுள்ளார். அப்போது, சிறுமியை பின் தொடர்ந்து சென்ற சுரேஷ், சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமி கத்தி கூச்சலிட்டதை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வருவதற்குள் சுரேஷ் அங்கிருந்து தப்பி சென்றான். சிறுமி நடந்தவற்றை பெற்றோருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கோட்டயத்தில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் சுரேஷ் பதுங்கியிருந்ததை கண்டறிந்து, கைது செய்துள்ளனர். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close