பகவதியம்மன் கோயிலில் நயன்தாரா பரிகார பூஜை! காதலனுடன் வலம் வந்தார்!

  அனிதா   | Last Modified : 10 Dec, 2019 03:41 pm
nayanthara-with-lover-in-kanyakumari

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, ஐயா என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இதை தொடர்ந்து சந்திரமுகி, வல்லவன், ஈ, ராஜா ராணி என பல படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். 

இவர், இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவரும் பெரும்பாலும் ஒன்றாகவே சுற்றி வருகின்றனர். சமீபத்தில் அமெரிக்காவில் காதலர் விக்னேஷ் சிவத்துடன் சேர்ந்து தோழிகள் வீட்டில் இரவு விருந்து உட்கொண்டது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில் நேற்று மாலை கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோவிலுக்கு காதலர்  விக்னேஷ் சிவனுடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கால பைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி,  தர்ம சாஸ்தா சன்னதி, சூரிய பகவான் சன்னதி ஆகியவற்றில் தரிசனம் செய்தனர். 

இதனிடையே நயன்தாரா வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரை காண்பதற்காக திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் பலத்த பாதுகாப்புடன் காரில் அனுப்பி வைத்தனர். 

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா தனது 2வது திருமணத்திற்கு முன்பு பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்து விட்டு சென்றார். தற்போது, நயன்தாரா கதலனுடன் ஜோடியாக தரிசம் செய்துவிட்டு சென்றுள்ளதால் விரைவில் திருமணம் தேதியை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close