நயன்தாரா பரிகார பூஜை! திருச்செந்தூர் கோவிலில் காதலனுடன் சுவாமி தரிசனம்!

  அனிதா   | Last Modified : 10 Dec, 2019 03:43 pm
nayanthara-with-lover-at-tiruchendur-temple

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள நயன்தாரா. இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவரும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தாங்கள் இணைந்து இருக்கும் புகைபடங்களை வெளியிட்டு வருகின்றனர். விரைவில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், நயன்தார தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கோவில்களில் வழிபாடு செய்து வருகிறார். நேற்றைய தினம் கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோவிலுக்கு சென்று, கால பைரவர் சன்னதி, பகவதியம்மன் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி,  தர்ம சாஸ்தா சன்னதி, சூரிய பகவான் சன்னதி ஆகியவற்றில் பிரார்த்தனை செய்தனர். 

இதனிடையே இன்று, திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற  சுப்பிரமணியசுவாமி கோவிலில் நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து சுவாமி தரிசனம் செய்துள்ளார். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கதை, திரைக்கதையில் உருவாகவுள்ள படம் 'மூக்குத்தி அம்மன் படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கவுள்ளார். படத்திற்காக படக்குழுவினர் அனைவரும் சைவத்துக்கு மாறி உள்ளதாகவும், நடிகை நயன்தாரா விரதம் இருந்து வருவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், நயன்தாரா காதலனுடன் கோவில்களில் பிரார்த்தனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close