நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்! பொதுமக்கள் நேரில் பார்க்க விண்ணப்பிக்கலாம்!

  அனிதா   | Last Modified : 10 Dec, 2019 06:56 pm
countdown-for-the-launch-of-pslvc48-mission-commenced-today

பூமியை கண்காணிப்பதற்காக ரீசாட்-2பிஆர்1 என்ற செயற்கை கோளை இஸ்ரோ உருவாக்கி உள்ளது. இதனை பி.எஸ்.எல்.வி சி48 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.  நாளை (புதன்கிழமை) மாலை 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.  ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, இறுதிக்கட்ட பணியான  கவுண்ட்டவுன் இன்று மாலை 4.40 மணிக்கு தொடங்கியது. 

628 கிலோ எடைக்கொண்ட இந்த செயற்கை கோள் 5 ஆண்டுகள் விண்ணில் அதன் பணியை செய்ய உள்ளது. பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்வையிட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பொதுமக்கள் நாளை அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ ஆன்-லைன் முகவரியில் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close