ருசியுமில்ல.. காரமுமில்ல... வீணாகும் எகிப்து வெங்காயம்! 

  அனிதா   | Last Modified : 10 Dec, 2019 07:32 pm
people-rejects-egypt-onion

வெங்காய விலையை கட்டுப்படுத்த எகிப்தில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவு மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து மும்பை துறைமுகத்தில் சமீபத்தில் ஆயிரக்கணக்கான டன் வெங்காயங்கள் எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.  அதன் பின்னர், இவை பல பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டன. தமிழகத்திற்கும் அதிகமான அளவில் எகிப்து வெங்காயங்கள் வரத் தொடங்கி உள்ளன. ஆனால், எகிப்து வெங்காயங்களை வாங்க பொதுமக்கள் யாரும் அதிகளவில் ஆர்வம் காட்டாததால் வியாபாரிகள் கவலையில் உள்ளனர். 

எகிப்து வெங்காயம் அதிக எடையுடனும், ருசியில்லாமலும், சுத்தமாக காரத்தன்மையுமின்றி இருப்பதாக கூறி அவற்றை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close