காதலிக்காக அஜித் பட ஸ்டைலில் மனைவியைக் கொன்ற கணவன்!

  முத்து   | Last Modified : 11 Dec, 2019 07:36 pm
kerala-man-killed-wife-girlfriend

காதலியுடன் சேர்ந்து வாழ்வதற்காக திரைப்படத்தை பார்த்து அதில் வருவது போது மனைவியைக் கொலை செய்தேன் என்று கணவர் வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த பிரேம் குமார் என்பவரின் மனைவி வித்யா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். திருமணத்திற்கு பிறகும் பிரோம் குமாருடன் தொடரில் இருந்த காதலி சுனிதா தான் இதற்கு காரணம் கூறப்பட்டது. மேலும் காதலி சுனிதாவின் உதவியுடன் பிரேம் குமார் தனது மனைவி வித்யாவை கழுத்தை நெறித்துக் கொலை செய்ததும் காவல்துறையினர் பிடியில் சிக்காமல் இருக்க அவரது உடலை காரில் ஏற்றி நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் ஆளில்லாத இடத்தில் வீசியதும் தெரியவந்தது. மேலும், மனைவியின் மொபைல் போனை பீகாருக்குச் செல்லும் ரயிலில் தூக்கிவீசியுள்ளார். பின்னர், காவல்துறையினரிடம் மனைவியைக் காணவில்லை என்று பிரேம் குமார் புகார் அளித்துள்ளார். 
காவல்துறையினரோ செல்போன் மூலம் பெண்ணைத் தேடும்போது அது பீகார் இருப்பிடத்தைக் காட்டியுள்ளது. ஆனால், விசாரணையின்போது, பிரேம்குமாருக்கும், வித்யாவுக்கு இடையே மனக் கசப்பு இருந்ததும், பிரேமுக்கு பள்ளி மாணவர்களுடன் சந்திப்பு நிகழ்ந்தபோதிலிருந்து சுனிதாவுடன் பழக்கம் இருந்துள்ளது தெரியவந்தது. 

அவர்கள் இருவரையும் விசாரித்தப்போது வித்யாவைக் கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர். மேலும் தமிழில் கமல்ஹாசன் நடித்த பாபநாசம் திரைப்படத்தின் மலையாள திரைப்படமான த்ரிஸியம் படத்தை பார்த்து அதன் மூலம் கொலை செய்ய திட்டமிட்டதாக பிரோம் குமார் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close