காதலி வற்புறுத்தியதால் காதலன் தற்கொலை..!

  அனிதா   | Last Modified : 11 Dec, 2019 10:50 am
young-man-suicide

பொதுவாக காதலன் மிரட்டலுக்கு பயந்து காதலி தற்கொலை முயற்சி செய்து கொண்டதாக தான் செய்திகளில் பார்த்திருப்போம். இங்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலனை சந்தித்து காதலி வற்புறுத்தியதால் காதலன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தையடுத்த அம்மன் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரமாக பிரிந்துள்ளனர். இந்நைலயில், சமீபத்தில் மணிகண்டனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. நிச்சயம் செய்த பெண்ணுடன் மணிகண்டன் வெளியே சுற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதை அறிந்த மணிகண்டனின் முன்னாள் காதலி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த வற்புறுத்தலுக்கு பிறகு அவரையே திருமணம் செய்ய மணிகண்டன் முடிவெடுத்தாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த மணிகண்டன் குடும்பத்தில் பிரச்சனை வந்துள்ளது. இதனால் ஓட்டுநர் மணிகண்டனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close