தீபாவளி பார்ட்டிக்கு ஜெயஸ்ரீயை அழைத்தது இவர் தான்.. பிக்பாஸ் பிரபலம் பகீர் தகவல்..!

  அனிதா   | Last Modified : 11 Dec, 2019 12:26 pm
he-was-the-one-who-invited-jaisree-to-the-diwali-party

தீபாவளியன்று மகாலட்சுமியின் கணவனுடன் பார்ட்டி கொண்டாடியதாக ஈஸ்வர் கூறிய நிலையில், பிக்பாஸ் பிரபலம் ஜெயஸ்ரீ யாருடன் பார்ட்டி கொண்டாடினார் என்பதை பகிரங்கமாக தெரிவித்துள்ளார். 

ராஜா ராணி, கல்யானம் முதல் காதல்வரை உள்ளிட்ட பிரபல சீரியல்களில் நடித்தவர் ஈஸ்வர். இவர் வம்சம் சீரியலில் வில்லியாக நடித்த ஜெயஸ்ரீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜெயஸ்ரீக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில், நடிகர் ஈஸ்வரை திருமணம் செய்திருந்தார். இந்நிலையில், திடீரென தன் கணவன் தன்னை அடித்து துன்புறுத்துவதாக காவல்நிலையத்தில் ஜெயஸ்ரீ புகார் அளித்தார். 

புகாரின் பேரில் காவல்துறையினர் ஈஸ்வர் மற்றும் அவரது தாயாரை கைது செய்தனர். ஈஸ்வர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த ஜெயஸ்ரீ, சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் தனது கணவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவரை திருமணம் செய்து கொள்வதற்காக தன்னிடம் விவகாரத்து கேட்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், குடிபோதையில் தனது மகளிடம் தப்பாக நடக்க முயன்றதாகவும் அவர் கூறியிருந்தார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே, ஜாமீனில் வெளியே வந்த ஈஸ்வர், தன் மனைவியின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானது. அவர் என்னிடம் பணம் பறிப்பதற்காக இதுபோன்ற பொய்களை கூறிவருவதாகவும், என் மனைவியின் நடவடிக்கைக்கு மகாலட்சுமியின் கணவர் அனில் தான் காரணம் எனவும், ஜெயஸ்ரீ தீபாவளி தினத்தன்று மகாலட்சுமியின் கணவருடன் பார்ட்டிக்கு சென்று குடித்து விட்டு ஆட்டம் போட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், கடந்த தீபாவளிக்கு ஜெயஸ்ரீயை பார்ட்டிக்கு அழைத்தது நான் தான் என பிக்பாஸ் பிரபலம் ரேஷ்மா கூறியுள்ளார். அதோடு, ஜெயஸ்ரீக்கும் மகாலட்சுமியின் கணவருக்கு இடையே இருப்பது ஒரு அண்ணன், தங்கை உறவு மட்டுமே என்றும் அந்த உறவை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம் எனவும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close