நடிகை ஸ்ரேயா திடீர் கைது! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

  அனிதா   | Last Modified : 11 Dec, 2019 02:42 pm
actress-shrieya-arrested

தமிழ் திரையுலகில், எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ரேயா, அதன் பின்னர் மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ்மகன், கந்தசாமி, குட்டி என பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்த பிறகு ஸ்ரேயா அதிகளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். 

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற பல மொழி பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  பிரபல நடிகையாக புகழின் உச்சியில் இருந்த ஸ்ரேயாவிற்கு பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும், நீண்ட நாட்களாக தான் காதலித்து வந்த ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவை திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்குப் பிறகு மீண்டும் நடிக்க துவங்கிய ஸ்ரேயாவிற்கு எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தமிழில், நடிகர் விமலுடன் சண்டைகாரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சண்டைக்காரி படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைப்பெற்று வருகிறது. படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் லண்டனில் சுற்றிப் பார்த்து வரும் நடிகை ஸ்ரேயா திடீரென உயர்பாதுகாப்பு பகுதியில் அத்துமீறி யாருடைய அனுமதியையும் பெறாமல் நுழைந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து உடனே லண்டன் போலீசார் நடிகை ஸ்ரேயாவை அதிரடியாக கைது செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த படக்குழுவினர் பதறியடித்துக் கொண்டு லண்டன் போலீசாரிடம் விவரம் சொல்லி, நடிகை ஸ்ரேயாவை மீட்டனர்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close