2011 கணக்கெடுப்பின் படியே உள்ளாட்சி தேர்தல்! உச்சநீதி மன்றம் அதிரடி!

  அனிதா   | Last Modified : 11 Dec, 2019 05:36 pm
local-election-case

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 4 மாதங்களில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற உத்தரவை மாற்றி 3 மாதங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் என்பது, இட ஒதுக்கீடு முறையை 2011 மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் அடிப்படையில் விகிதாச்சாரம் கடைபிடிக்கப்பட்டு, அதன் பின்னர் நடத்த வேண்டும் எனக் கோரி திமுக ,காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும், சில வாக்காளர்களும் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வார்டு முதல் நிர்வாகிகள் வரை அனைத்துக்கும், 2011-ம் ஆண்டு மக்கள் தொகையின்படி சட்டபூர்வ நடவடிக்கைளின் அடிப்படையில் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது. மேலும் 9 மாவட்டங்களுக்கு 2011-மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மறுவரையறை, இட ஒதுக்கீடு செய்து 3 மாதங்களில் தேர்தல் நடத்தவேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, ஏற்கெனவே 9 மாவட்டங்களுக்கு 4 மாதத்தில் சட்டபூர்வ பணிகளை முடித்துத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உத்தரவில் மாற்றம் செய்யப்பட்டு 3 மாதங்கள் என குறைக்கப்படுவதாக தெரிவித்தார். 

Newstm.in 

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close