பாகிஸ்தான் குரலில் சில கட்சிகள் பேசுகின்றன! மோடி அதிரடி!

  அனிதா   | Last Modified : 11 Dec, 2019 05:16 pm
the-citizenship-bill-will-be-etched-in-gold-in-history-pm

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்துள்ளது. 

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு உள்ளது. எதிர்ப்புக்கு மத்தியில், இன்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அமித்ஷா மசோதாவை தாக்கல் செய்து பேசினார். 

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், குடியுரிமை திருத்த மசோதா விவகாரத்தில் சில கட்சிகள் பாகிஸ்தான் குரலில் பேசுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close