ஜியோ நெட்வொர்க்கின் அதிரடி ஆஃபர்! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

  அனிதா   | Last Modified : 11 Dec, 2019 05:56 pm
jio-networks-new-offer

தமிழகத்தில் ஜியோ நிறுவனம் செல்ஃபோன் சேவையில் ஈடுபட்டு இலவச சேவைகளை அள்ளி இறைத்ததில் பல போட்டி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் வாடிக்கையாளர்களை இழந்தன. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஜியோ நெட்வொர்க்கிற்கு மாறினார்கள்.

இந்நிலையில், திடீரென ஜியோ நிறுவனம் செல்ஃபோன் கட்டணங்களை அதிகரித்து புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்தது. இந்த திடீர் ரீ சார்ஜ் கட்டணங்கள் உயர்வு ஜியோ வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புதிய திட்டப்படி, 149 மற்றும் 9‌8 ரூபாய் திட்டங்கள் ஜியோ ரீ சார்ஜில்  கைவிடப்பட்டன. தொடக்க கட்டணமாக129 ரூபாய் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 98 ரூபாய்க்கு 2 ஜிபி, 300 எஸ்எம்எஸ், 28 நாள் சேவை கொண்ட திட்டத்தை மீண்டும் அறிவித்துள்ளது. அதேபோல 24 நாள், 24 ஜிபி டேட்டா, 300 நிமிட மற்ற நிறுவன அழைப்பு, 100 எஸ்எம்எஸ் என்ற 149 ரூபாய் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close