புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை... அதிர்ச்சியில் கணவன்..

  அனிதா   | Last Modified : 12 Dec, 2019 10:30 am
woman-suicide-attempt

சேலத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர், சென்னை சிறுசேரியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, கடந்த நவம்பர் மாதம் ஈரோட்டைச் சேர்ந்த மீனா என்பவருடன் திருமணமானது. இவர்கள், சென்னை மேடவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு இடம்பெயர்ந்தனர்.

மகிழ்ச்சியாக இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், ராமலிங்கம் நேற்று வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு, மீனா தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர்,  மீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close