ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்..!

  அனிதா   | Last Modified : 12 Dec, 2019 02:39 pm
rajini-birthday-wishes

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. திரையுலம்  மட்டுமின்றி, தமிழகமே ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. ஆங்காங்கே ரசிகர்கள் மின் விளக்குகள் போட்டு மேடை அமைத்து, ஒலிபெருக்கிகளில் ரஜினிகாந்த்தின் சூப்பர் ஹிட் பாடல்களை போட்டு ஆட்டம், பாட்டம்  என கொண்டாடி வருகின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ரஜினிகாந்த்தின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி ரஜினிகாந்தின் வாழ்க்கை சிறப்பாக அமைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

இவரது பிறந்தநாளையொட்டி, பல பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில், எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர், சூப்பர் ஸ்டாருக்கு இதயமார்ந்த, பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும், நல்ல உடல் - மனநலத்துடனும், வளத்துடனும்,  மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்தி மகிழ்வதாகவும் பதிவிட்டுள்ளார். 

 

 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close