ப்ரீபெய்டு முறையில் மது விற்பனை.. முதலமைச்சரின் அடுத்த அதிரடி..

  அனிதா   | Last Modified : 12 Dec, 2019 01:38 pm
liquor-sales-in-prepaid-mode

தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வர வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் பலர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஆந்திராவில் ப்ரீபெய்டு முறையில் சரக்கு விற்பனை செய்யப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக ஆந்திர முதலமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆட்சியில் அமர்ந்தது முதற்கொண்டு பல்வேறு அதிரடி திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். முதலாவது காவல்துறையினருக்கு வார விடுமுறை அறிவித்தது ஆந்திராவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வரும் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, சமீபத்தில் பாலியல் குற்றங்களுக்கு உடனடியாக தூக்குதண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என அறிவித்தார். இது நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரிடையே பலத்த வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில், ப்ரீபெய்டு முறையில் மது விற்பனை செய்யப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு ஜெகன்மோகன் ரெட்டி மிகவும் போராடி வருகிறார். இதனை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக "ப்ரீபெய்ட் மதுவிற்பனை" என்ற முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறியுள்ளார்.

அதன்படி 25 வயது நிரம்பியவர்களுக்கு "லிக்கர் கார்ட்" என்ற மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட அட்டை வழங்கப்படும் என்றும் அந்த அட்டையை உபயோகித்து தான் மது வாங்க வேண்டும் என்றும் இந்த முறையில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஒரு நாளுக்கு இந்த அட்டையை உபயோகித்து வெறும் 3 மதுபாட்டில்களை ஒருவரால் பெற இயலும்.

இந்த அட்டையை பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுடன் இணைத்து பெற்றுக்கொள்ளலாம். இந்த அட்டையை 5000 ரூபாய் வரை ரீசார்ஜ் செய்து மதுவை வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close