பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்!

  அனிதா   | Last Modified : 12 Dec, 2019 12:21 pm
famous-actor-sudden-quit-the-dmk-party

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், இலக்கியவாதியும், நடிகருமான பழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகினார். 

2011ம் ஆண்டு அதிமுக சார்பில் சென்னை துறைமுகம் தொகுதியில்  போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரான பழ. கருப்பையா, கட்சிக் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, திமுக தலைவராக இருந்த மறைந்த கருணாநிதியின் முன்னிலையில், திமுகவில் இணைந்தார். 

இந்நிலையில்,  தற்போது திமுகவில் இருந்து திடீரென விலகியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், கார்ப்பரேட் நிறுவனம் போல் திமுக நடத்தப்படும் விதம் அதன் மீது சலிப்பை ஏற்படுத்தி விட்டது. திமுக தலைவர் ஸ்டாலினை நேரடியாக சந்தித்து விடைபெற்றேன் என்று தெரிவித்துள்ளார். பழ. கருப்பையாவின் திடீர் விலகல் திமுக கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close