ரஜினியின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த லதா ரஜினிகாந்த்..

  அனிதா   | Last Modified : 12 Dec, 2019 03:26 pm
lata-rajinikanth-thanked-rajini-fans

தலைவர் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ரஜினி ரசிகர்கள் மன்றம் சார்பில் பல இடங்களில் விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரசிகர்கள் காலை முதல் கோவில்களுக்கு சென்று ரஜினிகாந்த்திற்காக சிறப்பு பிராத்தனைகளை செய்து வருகின்றனர். 

இந்நிலையில், பிறந்தநாளில் ரஜிகாந்த்திற்கு வாழ்த்து கூறுவதற்காக நள்ளிரவு முதலே சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டு முன்பு ரசிகர்கள் திரண்டனர். ரஜினிகாந்தின் ரசிகர்களை சந்தித்த  ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்து இனிப்புகளை வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ரஜினிகாந்த்தின்  சார்பாக ரசிகர்கள் அனைவரின் அன்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். எங்களது குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். பலர் மிகவும் கஷ்டப்பட்டு நீண்ட தூரம் பயணம் செய்து இங்கு வந்துள்ளீர்கள். உங்களின் அன்புக்கு தலை வணங்குகிறோம்' என தெரிவித்தார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close