தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை! வானிலை எச்சரிக்கை!

  அனிதா   | Last Modified : 12 Dec, 2019 04:19 pm
heavy-rain-alert-for-tn

தமிழகத்தில் தாமதமாகத் தொடங்கினாலும் வடகிழக்கு பருவ மழை கடந்த ஆண்டை விட தமிழகத்தின் நீர் தேவையை இந்த வருடம் முழுவதுமாக பூர்த்தி செய்தது. தென் தமிழகத்தில் அதிகப்படியான மழை பெய்தது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஏரிகளும், அணைகளும் நிரம்பத் தொடங்கின.சில இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் அவ்வப்போது  மழை பெய்து கொண்டே  இருக்கிறது. சிறிது, சிறிதாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வரும் சூழ்நிலையில் மீண்டும் மூன்று தினங்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நாளை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.மேலும், 14 ஆம் தேதி கடலோர மற்றும் உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புகள் அதிகம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
சென்னையைப் பொருத்தவரை வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். சிற்சில இடங்களில் லேசானது முதல் மிதமானது மழை பெய்யக் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close