சஸ்பென்ஸ் கொடுத்த 'தலைவர் 168 டீம்'.. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி... வைரல் வீடியோ..

  அனிதா   | Last Modified : 12 Dec, 2019 05:55 pm
rajini-birthday-celebration

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள படம் தர்பார். இப்படத்தை  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். 'லைகா புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் போலீசாக நடித்துள்ளார்.  ரஜினிக்கு ஜோடியாக 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடித்துள்ளார். 

தர்பார் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த 168-வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படம் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில், குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். படப்பிடிப்புகள் டிசம்பர் 18-ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தின் 70வது பிறந்தநாளையொட்டி 'தலைவர் 168 டீம்' சஸ்பென்ஸாக ரஜினியின் இருப்பிடத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்து, கேக் வெட்டி ரஜினியுடன் கொண்டாடியுள்ளனர். இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளது. 

 

 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close