சொந்த மண்ணில் உலக சாதனை செய்த இந்திய அணி கேப்டன்

  அனிதா   | Last Modified : 12 Dec, 2019 06:27 pm
indian-captain-kohli-sets-new-world-record

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான  3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டு பீல்டிங்கை தேர்வு செய்தார்.  துவக்க ஜோடியாக லோகேஷ் ராகுல் மற்றும் ரோகித் இருவரும் களமிறக்கப்பட்டனர். ரோகித், விண்டீஸ் பந்துவீச்சை முறியடித்து 23 பந்துகளில் அரைசதம் கண்டார்.

கேப்டன் கோஹ்லி மற்றும் ராகுல் இருவரும் மீண்டும் அதிரடியாக ஆடத் துவங்கினர். ராகுல் 26 பந்துகளில் அரைசதம் கண்டார். ராகுல் 56 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.  

புயலென ஆடிக் கொண்டிருந்த கோஹ்லி வெறும் 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதனால் விறுவிறுவென ஸ்கோர் உயர்ந்தது. 7 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் அடித்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் மட்டுமே இழந்து 240 ரன்கள் குவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 8 இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-1 என கைப்பற்றியது. இந்த தொடரில் கேப்டன் கோஹ்லி ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன் மூலம் டி20 போட்டிகளில் அதிகமுறை ஆட்டநாயகன் விருது பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரை கோஹ்லி 12 முறை ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close