இன்னும் 1 மாசத்துல வாட்ஸ் அப் காணாம போயிடும்! ஷாக் கொடுத்த பேஸ்புக் நிறுவனம்!

  அனிதா   | Last Modified : 13 Dec, 2019 10:24 am
whatsapp-will-not-function-from-2020

 நம்மில் பலருக்கு வாட்ஸ் அப் தான் வாழ்க்கையே . வந்து விட்டது அதற்கும் ஆப்பு.  2020பிப்ரவரி  முதல் கோடிக்கணக்கான மொபைல் போன்களில் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியாது என வாட்ஸ்ஆப் நிறுவனம்  அறிவித்துள்ளது.

iOS8, 2.3.7 அதைவிட பழமையான ஆன்ட்டிராய்டு சாப்ட்வேர்களில் இயங்கும் போன்கள், வின்டோஸ் போன்கள், இந்த வகை போன்களை வைத்துள்ள பயனாளிகளால் புதிய வாட்ஸ்ஆப் கணக்குகளை துவக்கவோ, பழைய கணக்குகளை புதுப்பிக்கவோ முடியாத வகையில் ஏற்கனவே தொழில்நுட்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று  வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் உரிமையாளரான ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.


இதனிடையே அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவின் உள்ளிட்ட பல நாடுகளில் வாட்ஸ்ஆப் செயலிகள் முடக்கப்பட்டு உள்ளதாக  அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே கோடிக்கணக்கான செல்போன் பயனாளர்கள், வாட்ஸ் அப் செயலிக்காகவே ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வரும் நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு அதன் பயனாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close