3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு!

  முத்து   | Last Modified : 13 Dec, 2019 08:02 am
3-no-lottery-result-issue-death

விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரிக்கு அடிமையானதால் ஏற்பட்ட கடன் காரணமாக, 3 குழந்தைகளுக்கு சயனைடு கொடுத்து கொலை செய்த தம்பதி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

விழுப்புரம் முத்தோப்பு சலாமத் நகரைச் சேர்ந்த அருண் என்பவர் வீட்டிலேயே சொந்தமாக பட்டரை வைத்துக்கொண்டு நகை செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு சிவகாமி என்ற மனைவியும் 4 மாத குழந்தை உள்பட 3 பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வாட்ஸ் அப் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்ட அருண், அதில் 3 குழந்தைகளையும் தன் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் சயனைட் கொடுத்து கொலை செய்து விட்டு தானும் தன் மனைவியும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்திருந்தார்.

மேலும் மூணு நம்பர் லாட்டரியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நகைத்தொழிலும் கை கொடுக்கவில்லை என்றும் பதிவிட்டு, அந்த வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பி விட்டார். இதுபற்றி தகவலறிந்து வந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டை உடைத்து பார்த்தனர். ஆனால் அதற்கு உள்ளாகவே குழந்தைகளுக்கு சயனைட் கொடுத்துவிட்டு  அருணும், அவரது மனைவியும் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
எனினும் அவர்களை தூக்கிக்கொண்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே 5 பேரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். போதிய வருமானம் இன்றி 3 நம்பர் லாட்டரியால் கடனில் தத்தளித்த நபர் குடும்பத்தோடு தற்கொலை செய்த சம்பவம், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close