கல்யாண ஆசைக்காட்டி இளம்பெண் தொழிலதிபரிடம் பணம் பறிப்பு! கதறியழும் தொழில் அதிபர்!

  அனிதா   | Last Modified : 13 Dec, 2019 10:06 am
young-woman-who-made-money-fraud

திருமணம் செய்வதாக ஆசைகாட்டி தன்னிடம் பணம் பறித்து மோசடி செய்ததாக இளம்பெண் மீது தொழில் அதிபர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பள்ளிக்கரணை ஐ.ஐ.டி. காலனியை சேர்ந்தவர் பாலசந்தர் (39). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி இறந்துவிட்டதால் 2 குழந்தைகளும் மாமனார்வீட்டில் வளர்கிறார்கள். இவர் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவருடைய நிறுவனம் ஒன்றில் பயிற்சிக்காக சேர்ந்த  38 வயதுடைய பெண் ஒருவர் அன்பாக இவரிடம் பழகியுள்ளார். மேலும் திருமணமாகவில்லை என்றும், ஆசையாக 2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருவதாகவும் அவரிடம் தெரிவித்துள்ளார். 

மேலும், அவரிடம் நெருக்கமாக பழகிய அவர், திருமணம் செய்து கொள்வதாக பாலசந்தரிடம் தெரிவித்துள்ளர். அவரது அன்பு மற்றும் அக்கறையை பார்த்த பாலசந்தர் திருமணம் செய்து கொள்ள சம்மத்தித்துள்ளார். முதலில் 5 சவரன் தங்க நகையை பரிசாக கொடுத்துள்ளார். இந்நிலையில் ரூ.7 லட்சம் கடன் இருப்பதாகவும் அதற்கு வட்டி கட்ட பணம் தேவைப்படுவதாகவும் கூறி அவரிடம் பணம் வாங்கியுள்ளார். நாளடைவில் அந்த பெண் மோசடி பெண் என்று பாலசந்தருக்கு தெரியவந்துள்ளது. விசாரித்த போது, அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளதை அறிந்து, அதிர்ச்சியடைந்த பாலசந்தர் இது குறித்து அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் ஆபாசமாக திட்டி அடிக்க முயன்றுள்ளார். 

இந்நிலையில், திருமண ஆசைகாட்டி என்னிடம் நம்பிக்கை மோசடியில் ஈடுபட்ட அந்த பெண்ணால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், எனக்கு பாதுகாப்பு கொடுப்பதோடு அந்த பெண்ணின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தொழில் அதிபர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close