‘பொன்னியின் செல்வன்’ படத்துல இத்தனைப் பேரா? தாய்லாந்தில் படப்பிடிப்பு துவங்கியது!

  அனிதா   | Last Modified : 13 Dec, 2019 10:46 am
maniratnam-s-ponniyin-selvan-takes-off-on-floors

கல்கி எழுதி தமிழகம் மட்டுமில்லாது உலக முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களை தன்னகத்தே கொண்டுள்ள பொன்னியின் செல்வன் நாவலை  திரைப்படமாக இயக்கும் முயற்சியில் பிரபல இயக்குநர் மணிரத்தினம் ஈடுபட்டுள்ளார். இயக்குகிறார். 


‘பாகுபலி’ படத்தைப் போல இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ள இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய்,  கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, ஐஸ்வர்யா, சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள்

மணிரத்தினம் தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு கமர்சியல் பாடங்களை எல்லாக் காலத்தினருக்கு ஏற்ற வகையில் வழங்கி வருகிறார். இப்படிப்பட்ட ஜாம்பாவனுக்கும் ஒரு கனவுப் படம் இருந்திருக்கிறது என்றால் அதன் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எந்த அளவிற்கு இருந்திருக்கும் என்று சொல்லித் தெரியவில்லை. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு, பின்வாங்கி விட்டனர். உலக நயகன் கமல் கூட பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, பின்னர் அந்த முயற்சியைக் கைவிட்டார்.

தற்போது, இயக்குநர் மணிரத்தினம் அந்த முயற்சியில் ஈடுபட்டு, கிட்டத்தட்ட  திரைக்கதை முழுவதையும் முடித்து விட்டு, நட்சத்திரங்களின் தேர்வையும் முடித்து விட்டார். இந்நிலையில் அடுத்த கட்டமாக தாய்லாந்தில் பொன்னியில் செல்வன் படத்திற்கான முதல்கட்டப் படப்பிடிப்புகள் தொடங்கி விட்டது என்ற செய்தி ரசிகர்களுக்கு  பேரானந்தத்தை தந்துள்ளது. 
நடிகர்கள் கார்த்தியும் ஜெயம்ரவியும் ஏற்கெனவே படப்பிடிப்பில் கலந்துக் கொண்டுள்ள நிலையில் விக்ரம் இவர்களுடன் விரைவில் இணைவார் என்ற செய்தி படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close