பாஜகவின் அடுத்த அலப்பறை! பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம்!

  அனிதா   | Last Modified : 13 Dec, 2019 02:31 pm
lotus-symbol-passport

வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்களை அடையாளம் காணும் வகையிலும், அடையாள அட்டையாகவும் பயன்படுத்தப்படுவது பாஸ்போர்ட். இது வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், பாஸ்போர்ட் அலுவலகத்தால் வழங்கப்படுகிறது. அண்மையில் கேரள மாநிலத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பத்தவர்களுக்கு வழங்கப்பட்ட புதிய பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம் இருந்துள்ளது.

பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரி கையெழுத்திடவேண்டிய இடத்திற்கு மேல் தாமரை சின்னம் அச்சடிக்கப்பட்டிருந்தது. இதனால், பாஜகவின் சின்னமான தாமரை சின்னத்தை மத்திய அரசு  பாஸ்போர்ட்டில் அச்சடிக்கப்பட்டதற்கு கடுமையான விமர்சனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன. 

இந்நிலையில், பாதுகாப்பு காரணமாகவும், போலி பாஸ்போர்ட்டுகளை கண்டுபிடிப்பதற்காகவுமே தாமரை சின்னம் அச்சடிக்கப்பட்டதாக தலைமை பாஸ்போர்ட் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்தியாவின் தேசிய மலர் தாமரை என்பதால் தான் தாமரை இடம்பெற்றிருக்கிறது என்றும் விளக்கம் அளித்துள்ளார். 

இருப்பினும், இத்தகைய திட்டத்தை கைவிட்டு, தாமரையுடன் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளை திரும்ப பெறவேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஏற்கனவே பள்ளி வகுப்பறைகளில் காவி, பச்சை நிறம் அடிக்கப்பட்டது தொடர்பாக நாடு முழுவதும் பெரும் சர்ச்சை கிளம்பிய நிலையில், தற்போது பாஸ்போர்ட் விவகாரம் தலைதூக்கியுள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close