அடுத்தது இதுதான்! போலீசாருக்கு சவால் விடும் நித்தி! அதிர்ச்சியடைந்த போலீசார்!

  அனிதா   | Last Modified : 13 Dec, 2019 02:31 pm
nityanathan-speech-about-next-target

திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார். இதன் கிளைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன. குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற புகார்களின் அடிப்படையில் தற்போது போலீசாரால் நித்யானந்தா தேடப்பட்டு வருகிறார்.

இந்நிலையில்  நித்யானந்தா, 'கைலாஷ்' என்ற பெயரில் தனிநாடு  அமைக்கப்போவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனிடையே, வரும் 18-ஆம் தேதிக்குள் நித்தியானந்தா இருக்குமிடத்தைக் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய பெங்களூரு காவல்துறைக்குக் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், காவல்துறையினரின் கண்ணில் சிக்காமல் அவ்வபோது, சமூக வலைதளங்களில் வந்து ஏதேனும் உளறி கொண்டிருக்கும் நித்தியானந்தா, தற்போது, தன்னுடைய அடுத்த இலக்கு ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம்' என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டினால் இந்தியாவின் பொருளாதாரம் செழிக்கும் என்றும், நான் எந்த அமைப்பிலும் இல்லை என்ற போதிலும், எனது சந்நியாசிகளும் சீடர்களும் ராமர் கோயில் கட்ட தேவையான பங்களிப்பை செலுத்துங்கள் என கூறியுள்ளார். அதோடு, என் பங்கும் ராமர் கோயிலுக்கு உண்டு என்றும், என்னிடம் எதுவும் இல்லை என்று நான் கூறமாட்டேன். என்னிடம் லட்சுமி இருக்கிறாள். அதனால் ராமர் கோவில் கட்ட முறையான வழியில் நான் பங்களிப்பேன் என கூறியுள்ளார்.

ஏற்கனவே மதுரை ஆதினத்தின் 293வது மடாதிபதியாக தன்னை அறிவித்துக்கொண்ட நித்தியானந்தா,  பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து 293வது மடாதிபதியாக உரிமை கோரும் மனுவை வாபஸ் பெற்று, நீதிமன்றத்தில் மன்னிப்பும் கோரினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close