தருமபுரம் ஆதீனத்தின் 27வது மடாதிபதியாக பதவியேற்றார் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி..

  அனிதா   | Last Modified : 13 Dec, 2019 04:27 pm
srilasree-masilamani-sworn-in-as-the-27th-abbot-of-the-darumapuram-adeenum

தருமபுரம் ஆதீனத்தின் 27வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் பதவியேற்றுள்ளார்.

பாரதத்தின் பழமையான சைவத் திருமடமும் உலகளாவிய வகையில் போற்றுதலுக்குரிய சைவ சமயத்தின் குருவாகிய, தமிழ்நாடு தருமபுரம் ஆதீன மடத்தின் 26வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி அவர்கள் கடந்த 04.12.2019, புதன் கிழமை கார்த்திகை மாதம் சதய நட்சத்திரத்தில் மதியம் 2.40க்கு பரிபூரணம் அடைந்தார். இதை தொடர்ந்து, தருமபுரம் ஆதீனத்தின் 27வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் பதவியேற்றுள்ளார்.

ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாருக்கு திருப்பனந்தாள் மடத்தின் சுவாமிகள் இவருக்கு பட்டம் சூடிவைத்தார். இந்த விழாவில் பல்வேறு மடங்களின் மடாதிபதிகள், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close