நீட் தேர்வுக்கு விலக்கு கிடையாது! மத்திய அமைச்சர் அதிரடி!

  அனிதா   | Last Modified : 13 Dec, 2019 04:19 pm
cannot-be-exempt-the-neet-exam

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது. இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க முடியுமா? என திமுக எம்.பி டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் தமிழகம், புதுச்சேரி அரசுகளின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்றும், நாடு முழுவதும் ஒரே முறையில் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடத்தப்படுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் விலக்களிக்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956ன் படி அனைத்து மாநிலங்களுக்கும் நீட் தேர்வு பொருந்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close