கணவரை தாக்கி, கர்ப்பிணியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்.. மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு..

  அனிதா   | Last Modified : 14 Dec, 2019 08:45 am
the-pregnant-woman-was-raped

கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 22 வயது பெண். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது, அவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் தனது கணவருடன் கடலூரில் உள்ள ஒரு தியேட்டருக்கு இரவு படம் பார்க்க சென்றுவிட்டு, படம் முடிந்ததும் நள்ளிரவில் கணவருடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது காரில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் தம்பதியை வழிமறித்து, பெண்ணின் கணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அந்த பெண்ணை காரில் ஏற்றிக் கொண்டு, கடலூர் கம்மியம்பேட்டையில் உள்ள காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர். அங்கு வைத்து மர்ம நபர்கள் 3 பேரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

பின்னர் அந்த பெண்ணை மீண்டும் காரில் அழைத்துக் கொண்டு வீட்டின் அருகில் விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து அந்த பெண் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close