தலைமை செயலகத்தின் 6வது மாடியில் இருந்து குதித்த பெண்.. போலீஸ் விசாரணை

  அனிதா   | Last Modified : 14 Dec, 2019 12:11 pm
woman-suicide-attempt

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை அருகே மந்திராலயாவில் தலைமை செயலகம் அமைந்துள்ளது. இங்கு 6வது மாடியில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிப்பதற்காக நேற்று ஒரு பெண் வந்தார். கோரிக்கை மனுவை அளித்த பெண் திடீரென 6வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். 

அப்போது, முதல் மாடியில் விரிக்கப்பட்டிருந்த வலையில் அவர் விழுந்ததால் லேசான காயத்துடன் உயிர் தப்பினனார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், வலையில் விழுந்து கிடந்த பெண்ணை மீட்டனர். இதையடுத்து போலீசார் அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, கோரிக்கை மனு அளிக்க சென்ற போது, மனுவை பரிசீலனை செய்ய கால அவகாசம் தேவை என அதிகாரிகள் கூறியதாகவும், இதனால் மனமுடைந்து அவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close