குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா!

  அனிதா   | Last Modified : 14 Dec, 2019 02:59 pm
surprise-to-chief-minister-of-andhra-pradesh

சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது. ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீதான வழக்குகள் ஒரு வாரத்திற்குள் விசாரிகப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படுபவர்களுக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை வழங்குவதற்கான புதிய சட்டம் கொண்டுவர இருப்பதாக ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். இதற்கு நாடுமுழுவதும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், இந்த மசோதாவிற்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதை தொடர்ந்து சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான பணிகளில் ஆந்திர அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்ததன் மூலம், பாலியல் வழக்குகளுக்கு உச்சபட்ச தண்டனை விதிக்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை ஆந்திரா பெறுகிறது.

ஆந்திரப் பிரதேச திஷா சட்டம் (AP Disha Act) என இந்த சட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இதனை வரவேற்கும் விதமாக பெண் எம்.எல்.ஏ.க்களான ரோஜா உள்பட அனைவரும் முதலமைச்சர் அலுவலகத்திற்கு சென்று ஜெகனை சந்திந்து பாராட்டு தெரிவித்தனர். மேலும், குங்குமம் இட்டு, இனிப்பு ஊட்டிய பெண் எம்.எல்.ஏ.க்கள், பின்னர் முதலமைச்சர் கையில் ராக்கி கயிறு கட்டினர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close