பிராவோ ஓய்வு அறிவிப்பை வாபஸ் பெற்றதற்கு இவங்க தான் காரணமாம்!

  அனிதா   | Last Modified : 14 Dec, 2019 07:08 pm
these-two-are-the-reason-for-bravo-withdrawing-his-announcement

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 2016ல் களமிறங்கிய டிவைன் பிராவோ அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சினை உள்ளிட்ட பலக் காரணங்களுக்காக கடந்த 2018 ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். 

2004ல் அறிமுகமான டிவைன் பிராவோ இதுவரை 66 டி20, 164 ஒரு நாள் போட்டி மற்றும் 40 சர்வதேச போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடினார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் போன்ற உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். இந்நிலையில் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் அணியிலிருந்து பிராவோவுக்கு சிறப்பு அழைப்பு வந்திருக்கிறது. இந்த அழைப்பை பிராவோவும் மனதார ஏற்றுக் கொண்டு இது குறித்து தனது கருத்தையும் ரசிகர்களுக்கு தெரிவித்தார். 

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றமே அவருடைய ஓய்வு முடிவை வாபஸ் பெற வைத்துள்ளது. மேலும் அவர் அணிக்குத் திரும்புவதற்கு  கேப்டன் பொல்லார்ட்டும், மே.இ.தீவுகள் அணியின் பயிற்சியாளரும் தான் காரணம் எனவும் கூறியுள்ளார். 

2020 உலக கோப்பை நெருங்குகிற சமயத்தில் பிராவோவின் வருகை நிச்சயம் மே.இ.தீவுகள் அணிக்கு கூடுதல் பலமாகத் தான் இருக்கும். இந்நிலையில் 2012 மற்றும் 2016ம் ஆண்டு உலகக் கோப்பையைக் கைப்பற்றிய உத்தேச அணியில் பிராவோ இருந்தார். எனவே இந்த முறையும் பிராவோ இருந்தால் உலக கோப்பையைக் கைப்பற்றி விடலாம் என மே.இந்திய தீவுகள் அணி கணக்குப் போட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close