உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்கு! அதிர்ச்சியில் திமுக!

  அனிதா   | Last Modified : 14 Dec, 2019 05:44 pm
case-filed-on-udayanidhi-stalin

பொதுவாக அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டம் என்றாலே போராட்டக்காரர்கள் காலையில் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்படுவதும் அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படுவதில்லை என்பதும் வழக்கமாக இருந்து வருகிறது

ஆனால் இன்று சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் திமுக நடத்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் வழக்குப் பதிவு செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது. குறிப்பாக சென்னையில் குடியுரிமை சட்ட நகலை எரித்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 644 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் வழக்கை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளார். இதனால் திமுக அதிர்ச்சியில் உள்ளது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close