ஐதராபாத் என்கவுண்டர்! சடலங்களுக்கு ஊசி போட்ட போலீஸ் அதிகாரிகள்!

  அனிதா   | Last Modified : 14 Dec, 2019 06:01 pm
injections-worth-rs-7-500-for-corpses

ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்த குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு அழைத்து சென்ற போது தப்பி செல்ல முயன்றதால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்தாமல் என்கவுண்டர் செய்தது தவறு என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மறு உத்தரவு வரும்வரை என்கவுண்டர் செய்யப்பட்ட குற்றவாளிகளின் உடல்களை பதப்படுத்தி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை அடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி குற்றவாளிகளின் நால்வர் பிணங்களுக்கு ரூ.7,500 மதிப்புள்ள ஊசியை வாரம் ஒருமுறை செலுத்தி போலீசார் பதப்படுத்தி வருவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close