தர்பார் ட்ரைலர் வெளியீடு! இயக்குநர் முருகதாஸின் சந்தோஷ ட்வீட்!

  அனிதா   | Last Modified : 14 Dec, 2019 07:29 pm
darbar-trailer-release

சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கே தர்பார் படத்தின் டிரைலர் வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் ஏமாற்றத்தை தந்தது. இந்நிலையில் எப்போது வெளியாகும் தர்பார் படத்தின் டிரைலர் என்ற ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கத்திற்கு தயாரிப்பு நிறுவனம் இன்று  முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதன்படி தர்பார் படத்தின் டிரைலர் நாளை மறுநாள் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், லைக்கா புரொடக்சன் தயாரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்த  தர்பார் திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் இசையை அனிருத்தும், ஒளிப்பதிவை சந்தோஷ் சிவனும், படத் தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத்தும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close