சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்

  முத்து   | Last Modified : 16 Dec, 2019 07:21 am
chennai-road-accident-mother-and-daughter

சென்னை மடிப்பாக்கத்தில் அரசு பேருந்து - இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் தாய் மற்றும் மூன்று ‌வயது குழந்தை ஆகியோர் உயிரிழந்தனர்.

திரிசூலத்தைச் சேர்ந்த சுதா(25) கோவிலம்பாக்கத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டு குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளார். மடிப்பாக்கம் அருகே சென்றபோது பின்னால் வந்த அரசு பேருந்து திரும்பியப்போது பின் சக்கரத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில் சுதா‌ மற்றும் அவரது 3 வயது மகள் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தாயுடன் இருசக்கர வாகனத்தில் வந்த 2 வயது மகன் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினான். தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் உடல்களை மீட்டு, பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் வருகின்றனர்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close