கூட்ட நெரிசலில், ரயிலில் இருந்து கீழே விழுந்த இளம்பெண்! அநியாயமாய் உயிரை விட்ட சோகம்!

  முத்து   | Last Modified : 17 Dec, 2019 11:24 am
woman-dies-after-falling-off-train

மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த 22 வயது பெண் உயிரிழந்துள்ளார். 
மகாராஷ்டிரா மாநிலம் டோம்பிவ்லி ரயில் நிலையத்தில் இருந்து சார்மி பிசாத் என்ற இளம்பெண் சென்றார். ஆனால் சிறிது தூரத்தில் ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்தார். உடனே அவர் மீட்கப்பட்டு டோம்பிவ்லியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இளம்பெண்ணுக்கு தலை மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும்  இதன் காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். சார்மி பிசாத் படியில் நின்று பயணித்ததாகவும் ரயில் பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரால் சரியாக நிற்க முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனால் அவரால் கைப்பிடியை இறுகமாக பிடிக்க முடியாததால் தவறி விழுந்து உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதேஇடத்தில் நடப்பு ஆண்டில் இதுபோன்று 3 விபத்துகள் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close