திருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்! குவியும் பாராட்டுக்கள்!

  முத்து   | Last Modified : 18 Dec, 2019 09:39 am
a-female-employee-who-beat-the-thief-with-a-chilli-powder

ரஷ்யாவில் எரிவாயு  நிலையம் ஒன்றில் மிளகாய் பொடி தூவிய திருடனை, பெண் ஊழியர் துடைப்பத்தால் அடித்து துரத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

நோவோஸிபிரிக் என்ற இடத்தில் உள்ள எரிவாயு நிலையத்தின் பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து திருடன் கொள்ளையடிக்க முயற்சிக்கும் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 

அங்காடிக்குள் புகுந்த திருடன், மிளகாய்ப்பொடியை தூவி அங்கிருந்த ஊழியரை விரட்டிவிட்டு பணத்தை திருடுகிறான். அவனை பிடிக்க முயன்ற மற்றொரு பெண் ஊழியர் மீதும் மிளகாய் பொடியை தூவ முயற்சிக்கிறான். உடனடியாக சுதாரித்துக் கொண்ட அந்த பெண் ஊழியர், அருகில் இருந்த துடைப்பத்தை எடுத்து திருடனை அடித்து அங்காடியில் இருந்து விரட்டுகிறார். பெண்ணின் இந்த துணிச்சலான செயலால் கொள்ளை அடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close