விமானத்தில் நூதனமாக தங்கத்தைக் கடத்திய பெண் எஸ்.ஐ..! 

  முத்து   | Last Modified : 18 Dec, 2019 09:26 am
gold-seized-from-flight-si-and-woman-arrested

கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் துபாயில் இருந்து 2 கிலோ தங்கம் கடத்திய பெண் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இளம்பெண் பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.
துபாயில் இருந்து திருவனந்தபுரம் வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் யாரிடமும் தங்கம் சிக்கவில்லை.  இதையடுத்து அதிகாரிகள் விமானத்தில் சோதனை நடத்தினர்.

இதில் ஒரு இருக்கையின் அடியில் 2 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதிகாரிகள் தங்கத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அந்த இருக்கையில் பயணம் செய்தது திருவனந்தபுரம் கழக்கூட்டம் பகுதியை சேர்ந்த ஒரு  இளம்பெண் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த இளம் பெண்ணை அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். அவர் அளித்த தகவல் அடிப்படையில், வஞ்சியூர் சப்-இன்ஸ்பெக்டருக்கும் இந்த கடத்தலில் தொடர்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து தங்கம் கடத்தல் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close