சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திமுக பிரமுகர்.. போக்சோ சட்டத்தில் கைது...

  அனிதா   | Last Modified : 18 Dec, 2019 12:35 pm
a-man-who-has-committed-sexual-misconduct-a-girl

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியை சேர்ந்தவர் ராஜ் (50). இவர் தூத்துக்குடி மாவட்ட திமுக கலை இலக்கிய அணி துணை அமைப்பாளராக உள்ளார். மேலும், டிவி மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். 

இவர் அதேபகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை திருணம் செய்து கொள்வதாக கூறி தொடர்ந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் கர்ப்பம் அடைந்த சிறுமி அது தெரியாமல் தினமும் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இதனிடையே சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

இதைகேட்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்ததோடு, கதறி அழுதுள்ளனர். பின்னர் வீட்டிற்கு அழைத்து சென்று கர்ப்பத்தை கலைக்க மருந்து கொடுத்துள்ளனர். இதையடுத்து 6 மாதமான சிசு இறந்து பிறந்துள்ளது. அந்த சிசுவை யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்புறத்தில் குழித்தோண்டி புதைத்துள்ளனர். 

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு போலீசார், சிறுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த சிறுமி ராஜ் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் வெளியோ சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, புதுக்கோட்டையில் தலைமறைவாக இருந்த ராஜை காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close