அதிமுகவிற்கு செக் வைக்கும் திமுக மெகா ப்ளான்! அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்  நடந்தது என்ன? 

  அனிதா   | Last Modified : 18 Dec, 2019 06:30 pm
dmk-new-plan-against-admk

தமிழகத்தின் முதல்வர்  என்கிற அரியணைக்காக முக ஸ்டாலின் எந்த அளவிற்கும் செல்வார் என்று தெர்கிறது. பாஜக அரசின் குடையில் இருக்கும் அதிமுகவை அவ்வளவு எளிதாக வெல்ல முடியாது என்பது இடைத்தேர்தல் தோல்விகள் ஸ்டாலினுக்கு புரிய வைத்திருக்கும்.

ஆளுமையில்லாத தலைமை என்று சொன்னாலும் ஏறக்குறைய 3 1/2 ஆண்டுகாலம் தமிழகத்தை எடப்பாடி பழனிசாமி ஆண்டுவிட்டார். அதிமுக அரசின் மீதான வெறுப்பையும் மக்கள் மறக்க ஆரம்பித்துவிட்டனர். 
இந்த விரக்தியில் யார் என்ன சொன்னாலும் முயற்சி செய்து பார்ப்பது என முக ஸ்டாலின் முடிவெடுத்துவிட்டதாகத் தெரிகிறது. இந்த சந்தர்ப்பத்தைத் தான் பிரசாந்த் கிஷோர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திருத்திற்கு  எதிராக போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அதை ஒரு பெரிய விஷயமாக கருதாமல் 10ல் ஒரு பிரச்சினையாக எண்ணி அறிக்கை ஆர்ப்பாட்டம் என்பதோடு முக ஸ்டாலின் நிறுத்திக் கொண்டார்.

ஆனால் தமிழகத்தில் இருந்து திமுக என்ன செய்துக் கொண்டிருக்கிறது என நெட்டிசன்களும், அரசியல் அமைப்புகளும் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தன. போதாக் குறைக்கு கட்சியில் இருந்து விலகிய கரு பழனியப்பன் மைக் போட்டு ஊருக்கெல்லாம் திமுக மீதான குறைகளை அள்ளி வீசிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்குமோ என்ற அச்சத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு திமுகத் தலைவர் அழைப்பு விடுத்ததாகத் தெரிகிறது. அதிமுக- பாஜக வின் எதிர்ப்பு அரசியலை சரிசெய்வதற்கு குடியுரிமை சட்டத்திருத்தம் தான் சரியானதாக இருக்கும் என அனைத்துக் கட்சித் தலைவர்களும் முக ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்கியிருக்கின்றனர்.

இஸ்லாமியர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் வாக்குகளை உள்ளாட்சித்  தேர்தலில் பெறுவதற்கு போராட்டமே சரியானதாக இருக்கும் என அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. சரி என ஸ்டாலினும் ஒப்புக் கொண்டாராம். 
எந்த தேதியில் போராட்டத்தை நடத்துவது என்ற கேள்விக்கு உள்ளாட்சித் தேர்தல் நடப்பதற்கு 3 நாட்கள் முன்னதாக இந்த போராட்டத்தை நடத்தினால் மக்களுக்கு நியாபகம் இருக்கும் என்று கூட்டாக முடிவு எடுக்கப்பட்டது.
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின் குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி சென்னையில் வருகிற 23ம் தேதி மாபெரும் கண்டனப் பேரணி நடைபெறும் என அறிவித்தார். மேலும் இந்தப் பேரணியில் அரசியல் பாகுபாடு இல்லாமல் எல்லாத் தரப்பினரும் கலந்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதோ போல் திருச்சியில் கட்சி பாகுபாடின்றி அன்பில் மகேஷால் நடத்தப்பட்ட மாநாட்டிற்கு பிறகு தான் முக ஸ்டாலினின் எழுச்சி ஆரம்பமானது. தற்போது மீண்டும் கட்சியின் சார்பிலான பேரணியாக இல்லாமல் பொதுமக்களின் பேரணியாக மாற்றினால் மக்களின் பேராதரவை பெற முடியும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதனால் அதிமுகவின்  வாக்கு வங்கியில் இருந்து ஒடுக்கப்பட்ட மற்றும் இஸ்லாமியர்களின் ஓட்டு வங்கியை தனியாக பிரித்து உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி பெற திமுக முழுவீச்சில் இறங்கியுள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close