தந்தையைக் கொன்றவர்களை நீதிபதி முன்னிலையில் சுட்டுக் கொன்ற சிறுவன்!

  Ramesh   | Last Modified : 19 Dec, 2019 10:29 am
murder-inside-up-court-in-bijnor

உத்தரபிரதேச மாநிலத்தில் நீதிமன்றத்திற்குள் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே கொலை குற்றவாளி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்த ஈஷான் அகமது மற்றும் அவரது உறவினர் சதாப் ஆகியோர் கடந்த மே மாதம் 28ஆம் தேதி தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டனர். இந்த கொலையை செய்ததாக ஷாநவாஸ் மற்றும் ஜாஃபர் என்ற இருவர் டெல்லியில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர் அவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் விசாரணைக்காக பிஜோர் மாவட்ட நீதிமன்றத்திற்கு ஷாநவாஸ் மற்றும் ஜாஃபர் ஆகிய இருவரும் அழைத்து வரப்பட்டனர். அங்கு கொலை செய்யப்பட்ட அகமதுவின் 11வது வகுப்பு படிக்கும் மகன் மற்றும் அவனுடைய இரு நண்பர்கள் துப்பாக்கியுடன் இருந்துள்ளனர். நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக தொடங்கிய சில நிமிடங்களில் அவர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதில் ஷாநவாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நீதிமன்ற அலுவலகத்திற்குள் இருந்த காவலர்கள் சிலர் மீது துப்பாக்கி குண்டு தாக்கியதில் அவர்கள் காயமடைந்தனர். நீதிமன்ற அலுவலகத்திற்குள் நீதிபதி முன்பாக நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
பின்னர் சிறிது நேரத்தில் தப்பியோட முயன்ற துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையை கொலை செய்தவரை பழிவாங்க துப்பாக்கியால் சுட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை காவலர்கள் உட்பட 18 பேரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற வளாகத்துக்குள் நுழையும் பொதுமக்களை சோதனை நடத்தாமல் அனுப்பியதே இந்த சம்பவத்துக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close