7 நாள்ல குழந்தை எப்படி? கணவரின் சந்தேகத்தை தீர்க்க மனைவி செய்த துணிச்சலான காரியம்!

  அனிதா   | Last Modified : 19 Dec, 2019 06:34 pm
the-wife-s-action-to-solve-her-husband-s-doubt

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள காட்டேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன் இவர் கடந்த பிப்ரவரி மாதம் தேன்மொழி என்ற பெண்ணை திருமணம் செய்து அவருடன் தாம்பத்திய வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளர்.  இதனிடையே முருகனுக்கு இந்தோனேசியாவில் வேலை கிடைத்துள்ளது. இதனால், திருமணம் முடிந்த 14 நாட்களிலேயே மனைவியை தன்னுடைய வீட்டில் விட்டு விட்டு வெளிநாடு சென்று விட்டார். இதையடுத்து தனியாக இருப்பதாக உணர்ந்த தேன்மொழி சில நாட்கள் தனது தாயர் வீட்டில் இருந்து வருவதாக கூறி விட்டு தாயார் வீட்டிற்கு வந்துள்ளார்.  

இந்நிலையில், மார்ச் மாதம் தேன்மொழி கர்ப்பமாக இருப்பது உறுதியானது. இதையடுத்து மகிழ்ச்சியான விஷயத்தை தனது கணவருக்கும், மாமியாருக்கும் தெரிவித்துள்ளார். ஆனால் தேன்மொழி மாமியாரோ இரண்டு வாரத்தில் 7 நாட்கள் கூட ஒன்றாக இருந்திருக்க வாய்ப்பில்லை அப்படி இருக்கையில் எப்படி கர்ப்பமாக முடியும் என கேட்டுள்ளார். அதோடு மகனிடமும் அது உன் குழந்தையாக இருக்காது என கூற முருகனும் தேன்மொழியை சந்தேகமாகவே பார்க்க ஆரம்பித்துள்ளார். 

இதையடுத்து பெண் வீட்டார் குழந்தை பிறந்த பிறகு சரியாகி விடும் என கூறி சமாதானப் படுத்தி அவரை அங்கே இருக்க வைத்துள்ளனர். தற்போது தேன்மொழிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், இதுவரை கணவன் வீட்டில் இருந்து ஒருவர் கூட குழந்தையை பற்றி விசாரிக்கவில்லை.

இதனால் மனமுடைந்த தேன்மொழி, கண்ணீருடன் கோவையில் இருந்து கணவன் வீட்டிற்கு தனது பச்சிளம் குழந்தையுடன் வந்து நீதி கேட்டு வாசலில் அமர்ந்தார். மேலும், உங்கள் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள டிஎன்ஏ பரிசோதனை செய்து பாருங்கள் என கதறினார்.

ஆனால், கணவன் வீட்டார் சற்றும் மனமிறங்காத நிலையில், அக்கம் பக்கத்தினர் கூடி வந்து பெண்ணுக்கு ஆறுதல் கூறியதோடு, படித்தவர்களாக இருந்தும் இது போன்று மருமகளிடம் நடந்து கொள்வது அநியாயம். என அறிவுரை கூறினர். இதையடுத்து தேன்மொழி வேறு வழியின்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கட்டிய கணவன் மனைவியையும், குழந்தையையும் தவிக்க விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close