பொறுப்பேற்ற 3ஆவது நாளில் அமமுக நிர்வாகி வெட்டிக்கொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு

  முத்து   | Last Modified : 20 Dec, 2019 06:36 am
madurai-ammk-leader-killed

மதுரை அருகே 3 நாட்களுக்கு முன் புதிதாக நியமிக்கப்பட்ட அ.ம.மு.க பொறுப்பாளர் ஒருவர் நடைபயிற்சி சென்ற போது வெட்டி படுகொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை வல்லாளம்பட்டி கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் அசோகன் கடந்த 3 நாட்களுக்கு முன் அப்பேரூராட்சியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் வழக்கம் போல் நண்பர்களுடன் நடைபயிற்சி சென்றிருக்கிறார். அப்போது செட்டிபட்டி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் அவர்களை சுற்றி வளைத்திருக்கின்றனர். 

பின்னர் நண்பர்களை மிரட்டி துரத்திவிட்டு அசோகனை குறிவைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் அசோகனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் முன்பகை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனிடையே படுகொலையைக் கண்டித்து அவரது உறவினர்கள் மேலூர் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close