நிலைத்தடுமாறி கிழே விழுந்த பெண்.. பின்னால் வந்த பேருந்து ஏறியதில் உயிரிழப்பு

  முத்து   | Last Modified : 21 Dec, 2019 07:17 am
chennai-govt-bus-accident-woman-death

சென்னையில் பரபரப்பான சாலையில் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த வயதான பெண்மணி மீது பேருந்து ஏறியதில் அவர் உயிரிழந்தார்.
சென்னையைச் சேர்ந்த எழிலரசி என்பவர் தனது கணவருடன் ஆயிரம் விளக்கில் இருந்து  தேனாம்பேட்டையை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார். அண்ணா மேம்பாலம் அருகே அவர்கள் சென்றப்போது திடீரென இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதால் இருசக்கர வாகனத்துடன் இருவரும் சாலையில் விழுந்தனர்.

அப்போது அவர்களின் பின்னால் வந்த  மாநகரப்பேருந்து எழிலரசி மீது ஏறியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அண்ணாசதுக்கம் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு அரசு பேருந்தின் ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரபரப்பான சாலையில் அவர்கள் கிழே விழுந்தப்போது திடீரென பிரேக் போட்டு பேருந்தை நிறுத்த முடியாததால் இந்த சோகம் நிகழ்ந்ததாக அங்கிருந்தவர்கள்  கூறுகின்றனர்,  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close