தொடரும் போராட்டமும்.. வன்முறையும்.. குடியுரிமை சட்டத்தின் எதிரொலி!

  முத்து   | Last Modified : 21 Dec, 2019 09:22 am
caa-protest-u-p-death-6-members

உத்திரப்பிரதேசத்தில் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் நடந்த வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர். 
குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மாணவர்கள், இஸ்லாமிய அமைப்பினர், அரசியல் கட்சியினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் போராட்டத்தின் போது வன்முறையும் நிகழ்கிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக கடும் வன்முறை நிகழ்ந்து வருகிறது. அங்கு காவல்துறையினரும் போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர். 

பிஜ்னார், கான்பூர், பெரோசாபாத், சம்பால், கோரக்பூர் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. அங்கு சுமார் 14 மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உத்தரபிரதேசத்தில் மட்டும் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.  டெல்லியிலும், பெங்களூரு, மங்களூரின் சில பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close