உங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்! வெளியான அதிர்ச்சி தகவல்!

  அனிதா   | Last Modified : 21 Dec, 2019 01:45 pm
new-technology-to-detect-facebook-members-location

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள், தங்களது இருப்பிடம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடியாதபடி, செயலியை அணைத்து வைத்தாலும் கூட, அதனை மூன்று வழிகளில் கண்டறிவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க செனட் சபையின் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராப் ஷெர்மென் கடிதம் மூலம் பதில் அளித்துள்ளார்.  அதில், பேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு விளம்பரங்களை அனுப்பி அதன் மூலம், வருவாய் ஈட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக பயன்பாட்டாளர்களின் இருப்பிடத்தை அறிந்து அதற்கேற்ப விளம்பரம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக கணிப்பொறி இருக்கும் இடத்தை அதன் செயலி மூலம் கண்டறிவதாகவும், பல நேரங்களில் செயலி அணைத்து வைக்கப்படுவதால், அவர்கள் பயன்படுத்தும் கணினியின் ஐபி முகவரியை வைத்து இடத்தை கண்டறிவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close