ராமதாஸ் மன்னிப்பு கேட்டால் நல்லது! திமுக எச்சரிக்கை! பஞ்சமி நில விவகாரம்!

  முத்து   | Last Modified : 21 Dec, 2019 10:14 am
ramadoss-ask-apology-for-mursolai-issue-by-dmk

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் ‘அசுரன்’ படத்தைப் பார்த்து பாராட்டினார். ‘இது படம் அல்ல பாடம்’ என டிவிட்டரில் ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். இந்தப் பதிவுக்கு பதில் அளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ‘முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடமே பஞ்சமி நிலம்தான்’ என்று தெரிவித்திருந்தார். இதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, அந்த நிலத்தின் பட்டாவை திமுக வெளியிட்டது. ஆனால், மூலப்பத்திரம் எங்கே என ராமதாஸ் கேள்வி எழுப்பினர். 

ஆனால், மூலப்பத்திரம் எங்கே என ராமதாஸ் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில செயலாளர், திமுக மீது தேசிய எஸ்.சி./எஸ்.டி. ஆணையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் பஞ்சமி நிலம் அவதூறு கிளப்பியதாக திமுக எம்.பி.யும், முரசொலி அறங்காவலருமான ஆர்.எஸ்.பாரதி சென்னை, எழும்பூர் 14வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை டாக்டர் ராமதாஸ், சீனிவாசன் ஆகியோர் மீது தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது முரசொலி நிலத்தின் மூல ஆவணங்களையும் 83 ஆண்டுகளுக்கு உண்டான ஆவணங்களையும் ஆர்.எஸ். பாரதி சமர்ப்பித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “முரசொலி நிலம் தொடர்பாக இதன் பிறகாவது உண்மையை உணர்ந்து  டாக்டர் ராமதாஸ், சீனிவாசன் ஆகியோர் மன்னிப்பு கோர வேண்டும்.

தவறை உணர்ந்து வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றார். அப்படி இருவரும் மன்னிப்பு கோரும் பட்சத்தில், திமுக தலைவரின் ஒப்புதலைப் பெற்று இந்த அவதூறு வழக்குகளை திரும்பப் பெற தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close