செல்வ செழிப்போட வாழ இன்னைக்கு இதைச் செய்ய மிஸ் பண்ணாதீங்க!!

  சாரா   | Last Modified : 23 Dec, 2019 04:24 pm
somawara-pradosham

திங்கட்கிழமையை சோமவார் என்று சொல்வார்கள். சிவனுக்கு  உகந்த நாள். சோமவார்  என்று சொல்லப்படுகிற திங்கட்கிழமையில் பிரதோஷம் வருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது.  அதனால், இன்று மாலையில் அருகில் இருக்கிற ஏதாவது ஒரு சிவன் கோயிலுக்குச் சென்று சிவனையும், நந்தி தேவரையும் தரிசனம் செய்தால், உங்கள் கடன் தொல்லைகள் எல்லாம் தீரும். கவலைகள் எல்லாம் பறந்தோடும் என்பது உறுதி. பொதுவாக, சிவன் கோயிலுக்குச் சென்றால், சிவபெருமானுக்கும் மற்ற பரிவார தெய்வங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வணங்குவோம். வழிபடுவோம்.

ஆனால் இன்றைய நாள், நந்தி தேவருக்கான நாள். இன்று ஆலயத்தின் உள்ளே நுழைந்ததுமே நாம் தரிசிக்கும் நந்திதேவவருக்கான முக்கியமான பூஜையே பிரதோஷ பூஜை தான். அதனால், இந்த சோமவாரப் பிரதோஷ தினத்தில் நந்திதேவரையும் சிவபெருமானையும் கண்ணார தரிசித்து, மனதார பிரார்த்தனைச் செய்து பலனடையுங்கள்.

மாலை 6 மணிக்குள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும். அப்படி தரிசனத்திற்குச் செல்லும் பொழுது, மறக்காமல் நந்திதேவருக்கு வில்வமும், அரளியும் வாங்கிச் சென்று சார்த்துங்கள். அருகம்புல் மாலை கொடுத்து வணங்கி வழிபட்டாலும் சிறப்பு. இன்று பிரதோஷ வேளையில் சிவனையும், நந்தியையும் நிச்சயம் பலன்களைத் தரும்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close